இயேசுவை போல் ஒருவர் இல்லை உலகம் எங்கிலும்




இயேசுவை போல் ஒருவர் இல்லை உலகம் எங்கிலும்

இயேசுவை போல் ஒருவர் இல்லை உலகம் எங்கிலும்
அவரை வெல்ல தேவன் இல்லை அகிலம் முழுவதும் -2
இயேசுவே ஆண்டவர் அவர் நிகராய் ஆளில்லை
ஜாதிகள் நிதம் பணியும் நாவுகள் நிதம் வாழ்த்தும்
காலமெல்லாம் போற்றி வணங்கிடும்-3

சர்வதேச ஜாதி ஜனங்கள் அவர் மூலமே
படைத்ததின் நோக்கமெல்லாம் அவருக்காகவே
சிந்தினார் இரத்தமே செலுத்தினார் கிரயமே
பாவிகள் எல்லோரும் மீட்பு அடையவே
நம்மை குற்றம் அற்றவர்களாக நிறுத்தவே
ஜீவ காணும் தேவ சித்தம் செய்யவே-2  -இயேசுவைப்போல்

இயேசுவை அறிந்திடா தாய் நாட்டினர்
மூன்றில் ஒரு பங்கு சுற்றி வாழுதே
ஜெபிக்கவும் மறந்துமே மீட்கவும் தவறியே
பொறுப்பற்று வாழ்ந்துவிட்டோம் தவறாகும்
கிறிஸ்து இயேசுவே ஆண்டவர் என்றுமே
அதை கூறுவோம் எல்லோரும் அறியவே -2 -இயேசுவைப்போல்

மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் ஈன தொலைவிலே
இயேசுவை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமலே
அண் ஞான இருளிலே சாத்தானின் பிடியிலே
அடிமைகளாய் அலைந்தோடி திரியுதே
இதை தீவிரமாய் ஏறெடுத்து காணுவோம்

நம் பிள்ளைகளை தேசம் எங்கும் அனுப்புவோம் -2  -இயேசுவைபோல் 

Comments

Popular posts from this blog

Nin sundhara kannu lyrics (um alagana kangal lyrics in kanada)