மன்னிப்பு:-
மன்னிப்பு:-
கர்த்தருக்குள் பிரியமானவர்களே
உங்கள் அனைவரையும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.
லூக்கா 23:34-இல் “அப்பொழுது
இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியதிருக்கிறார்களே என்றார்.”
உலகில் மிக சிறந்த மூன்று பூக்கள்
என்ன என்று கேட்டால் அன்பு, பண்பு
மற்றும் மன்னிப்பு என்று சொல்லலாம்.
இவை
மூன்றும் ஒருவரிடத்தில் இருந்தால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் நன்மை செய்பவர்களாக
உத்தமர்களாக இருப்பார்கள். ஆம் அந்த மூன்றில்
ஒன்றான மன்னிப்பைப் பற்றி காணலாம்.
லூக்கா 23:34-இல் இயேசு தன்னை
சிலுவையில் அறைந்தவர்களுக்காக, பிதாவினிடத்தில் மன்னிப்பு
கேட்கிறார். அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தனர் என்பதற்காக அல்ல, அவர்கள் செய்த பாவங்களுக்காக மற்றும் அவர்களை இயேசு கிறிஸ்துவானவர் அதிகமாக
நேசித்ததால் பிதாவினிடத்தில் சிலுவையிலும் மன்னிப்பு கேட்டார்.
அவர்
இப்படியாக மன்னிப்பு கேட்கும்போது அவர் நம்மில் எவ்வளவு அன்பு கூர்ந்தார் என நம்மால்
கர்ப்பனையில்கூட யோசிக்க முடியாது. இந்த மன்னிப்பில் அவ்வளவு மகா பெரிய அன்பு உள்ளது.
மன்னிப்பு
என்பதன் பொருள் சகிப்புத் தன்மை அதாவது இறக்கம் அல்லது மனதுருக்கம் என சொல்லலாம்.
லூக்கா
23:48-இல் இயேசு கிறிஸ்துவை யூதாஸ் முத்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் அவர் அவன் மீது
கோபப் படவில்லை. மாறாக அவனை மன்னித்து இறக்கம் காட்டினார்.
இயேசுவோடு
உடன் இருந்த மற்றொரு சீஷன் பேதுரு இயேசுவை மறுதலித்தார் . ஆனாலும் இயேசு பேதுருவையும்
மன்னித்தார். நம்மையும் மன்னித்து இருக்கிறார். ஆம் மன்னிப்பு என்பது மகா மேன்மையான
பண்பு, அந்த பண்பு உண்மையான அன்பு இல்லாவிட்டால் யாராலும் அதை பெற்றுக்கொள்ள முடியாது.
இயேசு
கிறிஸ்து நமக்கு மாதிரி ஜெபத்தை சொல்லிக்கொடுத்த போதிலும் மத்தேயு 6:12இல் “எங்கள்
கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள்
கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று சொல்லி கொடுக்கிறார். ஆனால் நாமோ யாரையும் மன்னிக்காமல்
இயேசுவே எங்களை மன்னியும் என வேண்டுகிறோம்.
நாம்
ஒருவேளை நம் சகோதரன் அல்லது அயலான் செய்த தவறை அவர்களிடத்தில் மன்னித்துவிட்டேன் என்று
சொல்லிவிட்டு, அவர்களைப் பற்றி மற்றவர்களிடத்தில் குறை சொல்லிக்கொண்டு
இருந்தால் நீங்கள் அவர்களை மன்னிக்கவில்லை என்பது உண்மை. நாம் அவர்களை மன்னித்தது உண்மையாக
இருந்தால் அவர்களைப் பற்றி யாரிடமும் குறை சொல்ல மாட்டோம்.
அதுவே
உங்கள் கடனாளிகளை மன்னிக்கும் உண்மையான மன்னிப்பு, ஒருவேளை
நீங்கள் அவர்களை மன்னிக்கவில்லை என்றால் தேவனும் உங்கள் தப்பிதங்களை மன்னிக்கமாட்டார்.
நாம்
கிறிஸ்துவை நேசிப்பது உண்மையானால் எல்லோரையும் மன்னிக்க கற்றுக்கொள்ளவேண்டும். அதுவே
உண்மையான இரட்சிப்பு. கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
Comments
Post a Comment